விழிப்புணர்வூட்டல்
குறித்த மாவட்ட அலுவலகங்கள் மற்றும் ஏனைய அரசாங்க ஒழுங்குமுறைப்படுத்துநர்கள் ஆகியோரின் கோரிக்கையின் மீது எமது பிராந்திய அலுவலகங்களால் விழிப்புணர்வூட்டல் ஓர் ஒழுங்குமுறையான சேவையாக வழங்கப்படுகிறது.
புனர்வாழ்வு
சூழலியல் இசைவு சான்றிதழ்கள்
1980ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க தேசிய சூழலியல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள சுரங்கம் அகழ்தல் மற்றும் கனிப்பொருட்களை பிரித்தெடுத்தல் கருத்திட்டங்கள்; ஆரம்ப சூழலியல் பரிசோதனை அறிக்கையை (ஐநுநுசு) அல்லது சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை (நுஐயுசு) சமர்ப்பிப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட சூழலியல் இசைவுச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும். கைத்தொழில் சுரங்க அகழ்வு 'யு' வகை அனுமதிப்பத்திரத்தின் கீழ் அனைத்து சுரங்க அகழ்வு நடவடிக்கைகளும் சூழலியல் இசைவுச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதன் போது பின்வருவனவற்றில் கவனம் செலுத்த வேண்டும்:
- கைத்தொழில் சுரங்க அகழ்வு 'யு' வகை அனுமதிப்பத்திரத்தின் கீழ் அனைத்து சுரங்க அகழ்வு கருத்திட்டங்களும் பரிந்துரைக்கப்படுவதாகக் கருதப்படவில்லை.
- மத்திய சுற்றாடல் அதிகாரசபை (ஊநுயு) சூழலியல் இசைவுச் சான்றிதழ் என்ற வகையில் சூழலியல் பாதுகாப்பு அனுமதிப்பத்தரத்தை (நுPடு) அல்லது சூழலியல் பரிந்துரையை வழங்குகின்றது. இது வரை சூழலியல் பரிந்துரை தேசிய சுற்றாடல் அதிகாரசபையாக (Nநுயு) சட்டபூர்மானதாக்கப்படவில்லை.