1992ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க சுரங்கங்கள் மற்றும் கனிப்பொருள் சட்டம்; மற்றும் அதன் ஒழுங்கு விதிகள் 2009ஆம் ஆண்டின் 66ஆம் இலக்க சுரங்கங்கள் மற்றும் கனிப்பொருள் (திருத்தச்) சட்டமாகத் திருத்தப்பட்டதோடு, அந்தச் சட்டத்தின் கீழ் புவிச்சரிதவியல் மதிப்பீடு மற்றும் சுரங்கங்கள் அகழ்வு பணியகம் (புளுஆடீ) அனுமதிப் பத்திரங்களை வழங்குகிறது. அவையாவன பரிசோதனை, கனிப்பொருட்களுக்காக சுரங்கம் அகழ்தல், போக்குவரத்து, சிறப்பான முறையில் தயாரித்தல், களஞ்சியப்படுத்துதல், உள்நாட்டில் வர்த்தகம் செய்தல் ஏற்றுமதி செய்தல் என்பவையாகும். இந்த அனுமதிப்பத்திரங்கள் பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

பிரதான சட்டவாக்கத்தின் 29வது பிரிவுக்கு அமைவாக அதன் பிரிவு 11(2) திருத்தத்துடன் சேர்த்து வாசிக்கவும். அதன் படி கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ளோர் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவார்களாவார்கள்:

  1. பின்வரும் தனிநபர் ஒருவர்
    1. 18 வயதிற்குக் குறைந்தவர்É
    2. அரசாங்க உத்தியோகத்தர், எந்தவொரு மாகாணசபையின் அல்லது உள்ளூராட்சி நிறுவனத்தின் ஊழியர்É
    3. இலங்கையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற நிறுவனத்தினால் வெளிப்படுத்தப்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட நபர்;É அல்லது
    4. இலங்கையில் அல்லது வேறு ஏதேனும் ஒரு நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற ஏதேனும் நிறுவனத்தினால் கடன் தீர்க்க வழியற்றவர் அல்லது வங்குறோத்தானவர் என்று வெளிப்படுத்தப்பட்டு, கடன் தீர்க்க வழியற்றவர் அல்லது வங்குறோத்தானவர் என்ற நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்É
    5. பாராளுமன்ற உறுப்பினர் அல்லது மாகாணசபை உறுப்பினர் அல்லது உள்ளூராட்சி நிறுவன உறுப்பினர்É
  2. பின்வரும் கம்பெனி –
    1. இலங்கையில் வியாபாரம் செய்வதற்குப் பதிவு செய்யப்படாத கம்பெனி;É
    2. வங்குறோத்தான கம்பெனி அல்லது ஒழிக்கப்பட்ட கம்பெனி என வெளிப்படுத்தப்பட்டதுÉ
  3. பின்வரும் வியாபார நிறுவனம் –
    1. இலங்கையில் வியாபாரம் செய்வதற்குப் பதிவு செய்யப்படாத கம்பெனி;É
    2. வங்குறோத்தான கம்பெனி அல்லது ஒழிக்கப்பட்ட கம்பெனி என வெளிப்படுத்தப்பட்டதுÉ ஈ. அனுமதிப்பத்திரம் விண்ணப்பிக்கப்பட்டுள்ள நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்குத் தேவையான நிதி ஆற்றலும் தொழில்நுட்ப தகைமையும் இல்லாதவர் என பணியம் கருதுகின்ற எவரேனும் விண்ணப்பதாரி. ;
  4. அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு குறிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தத் தவறும் விண்ணப்பதாரி.

அனுமதிப்பத்திர வகை