சேகரிப்புகள்

  1. இரவல் கொடுக்கும் சேகரிப்புகள்

    நூலகத்தின் இரவல் கொடுக்கும் பிரிவு 5000 பாடப் புத்தகங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை புவியியல், புவி பௌதிகவியல், புவி இரசாயனவியல், பகுப்பாய்வு இரசாயனவியல், நிலநடுக்கவியல், புவி விஞ்ஞானம், சூழலியல் விஞ்ஞானம், சுரங்க அகழ்வு பொறியியல் என்பவற்றை உள்ளடக்குகிறது. இந்த சேகரிப்பு விடயங்களின் விபரங்களை விரைவில் இணையவழி விபர பட்டியலைப் பயன்படுத்தி பார்க்க முடியும். இரவல் கொடுக்கும் புத்தகங்கள் சர்வதேச 'னுநறநல டெசிமல் வகைப்படுத்தல்' என்று அழைக்கப்படும் சர்வதேச வகைப்படுத்தல் திட்டத்திற்கு அமைவாக விடயங்களுக்கு அமைவாக இராககைகளில் அடுக்கப்பட்டுள்ளன.

  2. உசாத்துணை சேகரிப்புகள்

    இதில் அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், தேசப்பட புத்தகங்கள், ஆண்டு புத்தகம், நிர்வாக அறிக்கைகள், வெளியிடப்படாத தொழில்நுட்ப அறிக்கைகள், பிரித்தெடுக்கப்பட்ட மற்றும் நிபுணர்களின் ஆய்வறிக்கைகள் போன்றவை... உள்ளடங்குகின்றன. பயனர்கள் நூலகத்தில் மாத்திரம் இவற்றைப் பார்வையிட முடியும்.

  3. ஆய்வுக் கட்டுரை சேகரிப்புகள்

    வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவகங்கள் என்பவற்றில் பட்டப் பின்படிப்பு பட்டம் பெற்ற புவிச்சரிதவியல் மதிப்பீடு மற்றும் சுரங்கங்கள் அகழ்வு பணியகத்தின் (புளுஆடீ) பணியாட் தொகுதி அங்கத்தினர்களால் பூர்த்தி செய்யப்பட்ட உயர் பட்டப்படிப்பு ஆய்வு கட்டுரைகள் இந்த நூலகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. விளக்கவுரைகள் ஒவ்வொரு விடயத்தின் கீழ் பட்டியல்படுத்தப்பட்டிருக்கின்றன.

  4. வரைபட சேகரிப்புகள்

    வரைபடம் என்பதில் வரைபடங்கள் மற்றும் தேசப்பட சேகரிப்புகள் உள்ளடங்குகின்றன. இந்த சேகரிப்பில் புவி அமைப்பு வரைபடங்கள், பாதை வரைபடங்கள், இலங்கையின் தேசிய தேசப்படங்கள், 1:100,000 அளவு கொண்ட 22 புவியியல் வரைபடங்கள், இலங்கையின் புவியியல் வரைபடம், இலங்கையின் கனிப்பொருள் வரைபடம் (03; மொழிகளில்), இலங்கையின் தோற்ற வேறுபாட்டு வரைபடம், இலங்கையின் கட்டமைப்பு ரீதியான வரைபடம், 1:250,000 அளவு கொண்ட 04 புவியியல் வரைபடங்கள், இலங்கையின் 1:50,000 அளவு கொண்ட வீடுகள் கொண்ட03 வரைபடங்கள் மற்றும் 1:50,000 அளவு கொண்ட 26 புவியியல் வரைபங்கள் (திட்ட பிரதிகள்).

  5. பருவ சஞ்சிகைகள் சேகரிப்புகள்

    பருவ சஞ்சிகைகள் சேகரிப்பில் 1887ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை புவியியல், புவி பௌதிகவியல், புவி இரசாயனவியல், கைத்தொழில் கனிப்பொருள், நிலநடுக்க பகுப்பாய்வு இரசாயனவியல், பாறைகளட போன்ற... விடயங்களை உள்ளடக்குகிற பருவ சஞ்சிகைகள் அடங்குகின்றன.

  6. செய்தித்தாள் துண்டுகள் சேகரிப்பு

    உள்ளூர் பத்திரிகைகளில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட மேற்கோள்கள். தினசரி பத்திரிகைகளான டெய்லி நியுஸ், த ஐலன்ட், திவயின, லங்காதீப, சிலுமின, ஞாயிறு லங்காதீப, சன்டே ஒப்சேவர்.....போன்ற பத்திரிகைள் நூலகத்தில் கிடைக்கக் கூடியதாக இருக்கின்றன.

  7. சிறப்பு நேகரிப்புகள்

    நூலக அளவுகோல்களுக்கு அமைவாக தனிநபர்களால் பெரும் எண்ணிக்கையில் பங்களிப்புச் செய்யப்பட்டுள்ள தெரிவு செய்யப்பட்ட படைப்புகள் சேகரிக்கப்பட்டு கட்டி வைக்கப்பட்டுள்ளன. இப்பொழுது நூலகத்தில் பின்வரும் சேகரிப்புகள் இருக்கின்றன.

- காலஞ் சென்ற பேராசியர் பி.ஜி.குரே அவர்களின் சேகரிப்பு

சேவைகள

  1. நூலகத்தின் நூல்கள் சம்பந்தமான விசாரணைகள் உள்ளிட்ட வாசகர் சேவைகள்.
  2. உசாத்துணை மற்றும் இரவல் கொடுக்கும் சேவைகள் (புவிச்சரிதவியல் மதிப்பீடு மற்றும் சுரங்கங்கள் அகழ்வு பணியகத்தின் (புளுஆடீ) பணியாட் தொகுதியினருக்கு இரவல் கொடுக்கும் சேவைகள்).
  3. தற்கால விழிப்புணர்வூட்டும் சேவைகள் (ஊயுளு)
  4. ஆவணங்களை விநியோகிக்கும் சேவைகள்.
  5. போட்டோ பிரதி சேவைகள்.
  6. நூலத்திற்கு இடையில் கடன் கொடுத்தல்.
  7. டிஜிட்டல் நூலகம் (நடைபெறுகிறது).
  8. இணையவழி பட்டியல் (நடைபெறுகிறது).