புவிச்சரிதவியல் மதிப்பீடு மற்றும் சுரங்கங்கள் அகழ்வு பணியகத்தின் (புளுஆடீ) நூலகமும் தகவல் மையமும் புவியியல் மற்றும் சுரங்கம் அகழ்வு மற்றும் கனிப்பொருள் வளங்கள் என்பவற்றுடன் சம்பந்தப்பட்ட தகவல்களைக் கொண்டுள்ள சிறப்பு நூலகமாக இருப்பதோடு, இந்த நூலகம் மற்றும் தகவல் மையம் என்பவற்றின்; பிரதான பொறுப்பு நிறுவகத்தின் விஞ்ஞானிகள் மற்றும் இந்த வளங்கள் சம்பந்தமாக கற்கைகளிலும் ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுகின்ற பயனர்கள் ஆகியோருக்கு தேவைப்படுகின்ற தகவல்களை அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாகச் சேகரித்தல், பரவச்செய்தல் மற்றும் வழங்குதல் என்பவற்றை உறுதிப்படுத்துவதோடு பயனர்களை அவர்களின் புத்தாக்க ஆராய்ச்சி கற்கைகளுக்கு செயலூக்கப்படுத்துவது என்பவையாகும்.

எமது செயற்பணி

புவிச்சரிதவியல் மதிப்பீடு மற்றும் சுரங்கங்கள் அகழ்வு பணியகத்தின் (புளுஆடீ) நூலக மற்றும் தகவல் மைய செயற் பணி சிறந்த கல்வி வளங்களையும் கல்வியறிவையும் அணுகுவதற்கு தகவல்களைச் சேகரித்தல் மற்றும் வழங்குதல்É உயர்ந்த தரத்திலான புத்தாக்க சேவைகளை வழங்குதல்É வரவேற்கத் தகுந்த மற்றும் வசதியான பௌதிக சூழலை உருவாக்குதல்.

எமது செயல்நோக்கு

புத்தாக்க மூலோபாயங்களைப் பயன்படுத்தி தகவல்களைப் பெறுவதற்கு உலகளாவிய அணுக்கத்தை வழங்கி புலமைசாலிகளைப் பரிமாற்றிக்கொள்ளுதல் மற்றும் அறிவை உருவாக்குதல் என்பவற்றுக்கு முன்னணி ஆராய்ச்சி நூலகமாகத் திகழ்வது.

குறிக்கோள்

  • புவிச்சரிதவியல் மதிப்பீடு மற்றும் சுரங்கங்கள் அகழ்வு பணியகத்தின் (புளுஆடீ) ஆய்வு பணியாளர்கள் மற்றும் ஆர்வம் காட்டும் ஏனைய தரப்பினர்கள் ஆகியோரின் நன்மைக்காக எமது ஆராய்ச்சியுடன் சம்பந்தப்பட்ட தகவல்களைச் சேகரித்தல், திரட்டுதல், மீட்டல் மற்றும் பரப்புதல்.
  • சிறந்த சமநிலையான மற்றும் தகுந்த தகவல்களைச் சேரிப்பதை விருத்தி செய்தல்.
  • அனைத்து வகையான தேசிய மற்றும் சர்வதேச தகவல்களை அணுகுவதற்கு வசதியளித்தல்.