இந்தப் பணியகம் அரசாங்கம், கைத்தொழில், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு தொண்டு அடிப்படையில் அல்லது தரகு (கமிஷன்) அடிப்படையில் சிறப்பறிஞர்களின் சேவைகளையும் புவிச்சரிதவியல் ஆலோசனைகளையும் வழங்கக் கூடியதாக இருப்பதோடு உண்மையை அடிப்படையாகக் கொண்ட தகவல்களைக் கொண்ட முதன்மை தோற்றுவாய்கள் என்ற வகையில் அதன் செயற்பாடுகளை பன்னிரண்டு தசாப்பதங்களுக்கு மேலாக விரிவான பரப்பெல்லையில் தேவைப்படுகின்ற நிபுணர்களைக் கொண்டு செயற்படுத்துகிறது.

விரிவான முறையில், அதன் செயற்பாடுகளில் புவியியல் வரைபடமாக்கல், பல் தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்ட கனிப்பொருள்களைக் கண்டறிதல், அனுமதிப்பத்திரங்களை வழங்குவதன் மூலம் சுரங்க அகழ்வு நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்துதல், ஆய்வுகளுக்குத் தலைப்பிடுதல் மற்றும் சுரங்கங்களை குத்தகைக்கு விடுதல் (கனிபொருள் உறுதி தயாரித்தல்) மற்றும் சேவை பெறுநர்களுக்கு பதில் அளிக்கும் நடவடிக்கைகள் (கனிப்பொருள் வளங்களை மதிப்பீடு செய்தல், புவி பௌதிகம் மற்றும் அகழ்வு ஒப்பந்தங்கள்), ஆய்வுகூட சேவைகள் மற்றும் வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாத அறிக்கைகள், தேசப்படங்கள் என்பவற்றுடன் சேர்த்து புவிச்சரிதவியல் தகவல்களை வழங்குதல்.

எமது செயற் பணி

அனுமதிப்பத்திரங்களை வழங்குதல், நிபுணர்களின் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் இலங்கையின் நிலையான பொருளாதார செழிப்பை பாதுகாத்துக்கொள்ளுவதற்கு புவியியல் தகவல்களை வழங்குதல் என்பவற்றின் மூலம் தொடர்ச்சியாக நாட்டின் புவியியல் வளங்களைத் திரட்டுதல், கனிப்பொருள் கண்டுபிடிப்புகளை ஒழுங்குமுறைப்படுத்துதல், சுரங்க அகழ்வு, செயற்பாடுகள், போக்குவரத்து, வர்த்தகம், களஞ்சியப்படுத்துதல் மற்றும் கனிப்பொருட்களை ஏற்றுமதி செய்தல்.

எமது செயல் நோக்கு

இலங்கையின் சமூக-பொருளாதார அபிவிருத்தியை நோக்கிச் செல்லுவதற்கு மக்களையும் நாட்டின் கனிப்பொருள் வளங்களையும் இணைத்தல்.