புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தினால் ஒழுங்குசெய்யப்படுகின்ற விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டங்களில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்காக வழங்கப்படுகின்ற நிகழ்ச்சிகளே முக்கிய இடம்வகிக்கின்றன. பிரதேச செயலாளர்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அகழ்வு அனுமதிப்பத்திரதாரர்களுக்கும் சுரங்க மற்றும் கனியப்பொருட்கள் கட்டளைச்சட்டத்தின்கீழ் வெளியிடப்படுகின்ற ஒழுங்குவிதிகள், சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பன தொடர்பான விழிப்பூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அவ்வாறே கனிய வளங்கள் புவி அனர்த்தங்கள் மற்றும் காலத்திற்குக் காலம் ஏற்படக்கூடிய ஏனைய புவியியல் சார்ந்த தகவல்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்பூட்டுவதற்கும் முக்கியமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் உயர்கல்வியை தொடரும் மாணவர்களுக்கும் இந்த நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.